Tuesday, 19 January 2010

புலம்பெயர்ந்தவனின் புலம்பல் 


கடனும் வாங்கி காணியும் விற்று
வட்டிக்கு உடன் காசும் எடுத்து கொடுத்து
சிவனே என்று வெளிநாடு வந்தால் - என் பலன்
நாட்டு பிரச்சினையும் தீர்கிறது ???

நாளை திருப்பி அனுப்புவானோ என நினைத்து
இன்று கலங்குவதெல்லாம்
நேற்று வாங்கி வந்த கடன் காசை
என்று கொடுப்பேனோ என்றஞ்சியே

வட்டிக்காரனும் காசை கேட்டு
குட்டி போட்ட பூனையைப்போல்
வீட்டை சுத்தி சுத்தி வருவதாக
சுட்டி தம்பி கடிதம் எழுதியுள்ளான்.

வளவு விற்ற காசு போனாலும் பரவாயில்லை
பிழையில்லாமல் கடனையாவது கொடுப்பதற்கு
சிலகாலம் இங்கிருந்து உழைக்கவாவது
சரியான முடிவொன்று விரைவாக வாராதோ.