Saturday 26 December 2009

நிலாவாகிய பெண்ணே!


ஆனி இருபது
இளவேனில் கால இனிய பொழுது
மனதிற்கினிய ஒரு மாலைப் பொழுது
கடுங் குளிரினுள் இருந்து மனம் சலித்த எங்களுக்கு
செங்கதிர் வீசி வசந்தமளித்த பகலவன் விடைபெறும் பொழுது


ஒரு வெண்ணிலா எழுந்தது 
விண்வெளியில் அல்ல  
என் கண்ணெதிரே 
கண்கள் நிலாவை நிதானமாய் விழுங்கின 
மனதில் புதிய கனவுகள் எழுந்தன  
பெண்ணிலா என்னை  கடந்த பின்னர்தான் தெரிந்தது- அது 
வெண்ணிலா மட்டுமல்ல இளந் தென்றலும் என்று  


மண்ணிலா அழகை கண்டு மண்ணில் ஒளிந்தான்  ஆதவன் 
மேற்கில் தெளித்த வர்ணங்கள் - என் 
மனதில் போட்டன கோலங்கள்  
அந்நிலா என்னையே பார்ப்பதாய் உணர்வு- ஆனால்  
வெண்ணிலா தன்னையே மறந்து மென்மையாய் சென்றது 
சற்று தூரத்தில் அதன் உருவமும் மறைந்தது 
மெல்ல தலை நிமிர்த்தி வானம் பார்த்தேன் இருண்டிருந்தது 
என் மனதினை போலவே

Wednesday 16 December 2009

அனைவருக்கும் வணக்கம்.